இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு..!

share on:
Classic

அரசு வேலைவாய்ப்புகளில், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கை, திருநம்பி எனும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி பிரிவாக பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழக சமூக நலத்துறை ஆணையர் அமுதவள்ளி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், சாதிச் சான்று இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதி இடஒதுக்கீடு வழங்க 2017-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கும் வகையில் 2015-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, வழக்கின் விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

News Counter: 
100
Loading...

Ragavan