ஆன்லைன் தேர்வில் காப்பி அடிக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சை..!!

share on:
Classic

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கான பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் தேர்வர்கள் சிலர் காப்பி அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் 119 மையங்களில் ஆன்லைன் கணினி ஆசிரியர் தேர்வு நடைபெற்றது. இதில் 25 ஆயிரத்து 806 பேர் கலந்து கொண்டனர். சில மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பலர் தேர்வெழுத முடியாமல் போனது. அவர்களுக்கு வரும் 27-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது கடந்த ஞாயிறு நடைபெற்ற தேர்வில் சிலர் காப்பி அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan