கனமழையால் பள்ளி வளாகத்தில் சாய்ந்தது மரம்.. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவமாணவிகள்..

share on:
Classic

திட்டக்குடி அருகே பள்ளி வளாகத்தில் மரம் விழுந்ததில் மாணவ, மாணவிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் பள்ளி வளாகத்திலிருந்த 60 ஆண்டு பழமையான ஆலமரம் நுழைவு வாயிலில் விழுந்தது. மரம் விழும்போது பள்ளி வேலை நேரம் என்பதால் பள்ளியிலிருந்த மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

News Counter: 
100
Loading...

aravind