டொனால்ட் டிரம்ப் - கிம் ஜாங் உன் இரண்டாவது சந்திப்பு இடம் அறிவிப்பு... எங்கே தெரியுமா?

Classic

வியட்நாமில் உள்ள ஹனாய் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரில்  டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பின்போது, தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் வட கொரிய அதிபர் கையெழுத்திட்டார். இதனையடுத்து, 2-வது முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் இடையிலான சந்திப்பு, வியட்நாமில் வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரு தலைவர்களும் சந்திக்கும் இடம் உறுதியாகியுள்ளது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், “எனது பிரதிநிதிகள் ஒரு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்குப் பின், கிம் ஜோங் உன்னுடன் எனது இரண்டாவது சந்திப்பு தேதி பற்றிய ஒப்புதலுடன், வடகொரியாவிருந்து திரும்புகிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind