ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது : டிரம்ப் எச்சரிக்கை..!!

share on:
Classic

ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 6 நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இதில் இருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க தொடங்கியது. பதிலுக்கு, அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரானும் எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து, அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, யுரேனியத்தை செறிவூட்டியதாக ஈரான் நேற்று அறிவித்தது. இந்தநிலையில், விளைவுகளை அறிந்தே ஈரான் இச்செயலை செய்துள்ளதாகவும், நெருப்புடன் ஈரான் விளையாடுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan