காஷ்மீர் விவகாரம் குறித்த டிரம்பின் கருத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி..!

share on:
Classic

காஷ்மீர் விவகாரம் குறித்து ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவையில் இது குறித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். வெளியுறவுத்துறை அமைச்சகம் தந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர். குறிப்பாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்க எழுந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், கோஷங்களை எழுப்பி அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தான் பதிலளிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 3 மணிக்கு கூடிய அவையில் இதே பிரச்சையை வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan