கர்நாடகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு : கூட்டணி ஆட்சி தொடருமா அல்லது ஆட்சி மாற்றமா..?

share on:
Classic

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளதால், நாளை கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கர்நாடகத்தில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவி வரும் சூழலில் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது எனவும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மும்பையில் தங்கியுள்ள அதிப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ பி.சி. பாட்டில் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறப் போவதில்லை எனவும், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துளார்.

சபாநாயகர், நியமனம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆகியோரை சேர்த்து தற்போது கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். அதில் ராஜினாமா கடிதம் அளித்த ராஜினாமா கடிதம் அளித்த எம்.எல்.ஏக்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 பேரும், மஜத கட்சியை சேர்ந்த 3 பேரும் என மொத்தம் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும் அரசுக்கு ஆதரவளித்து வந்த 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் தங்கள் ஆதரவை திரும்ப பெற்றனர்.

ஒருவேளை ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 101ஆக குறைந்துவிடும். அதேபோல் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவை சேர்த்தால் 105ஆக உள்ள பாஜகவின் பலம் 107ஆக உயர்ந்துவிடும். எனினும் நியமனம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்குபெறலாம் என்று கூறப்பட்டாலும் நாளை நடைபெற உள்ள வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்குமா..? இன்னும் 4 நாட்களில் கர்நாடகத்தில் பாஜகவின் ஆட்சி அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். கூட்டணி ஆட்சி தொடருமா..? அல்லது கவிழுமா என்பதை தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருக்க வேண்டும்.

 

News Counter: 
100
Loading...

Ramya