புகழுக்கு களங்கம் விளைவிக்க முயற்சி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்..!

share on:
Classic

தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கவே தன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோயகாய், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 22 பேரிடம் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெண் ஊழியரின் புகார் குறித்து மின்னஞ்சல் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அதில் தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், அந்த பெண் ஊழியர் அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே பழி சுமத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், “இது போன்ற பொய் புகார் அடிப்படை ஆதாரமற்றது” என்றும், “இப்படி புகாரை கூறியுள்ளதன் மூலமாக நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan