சுனாமி எச்சரிக்கை...!

share on:
Classic

நியூ கேலடோனியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நூற்றுக்கும் மேற்பட்ட குட்டுத்தீவுகளை உள்ளடக்கிய நியூ கேலடோனியா பிராந்தியம் ஃபிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இந்த பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட லாயல்ட்டி தீவுகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுனாமி தாக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பசுஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நியூ கேலடோனியாவில் உள்ள தீவுகளை சுற்றிலும் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை சுனாமி அலைகள் எழும்ப வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

News Counter: 
100
Loading...

mayakumar