டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா..? கிடைக்காதா..?

share on:
Classic

குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போடியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து சமீபத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தனக்கு தேர்தலில் குக்கர் சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் பதில் அளித்த தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என தெரிவித்தது. மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியது. இந்நிலையில் இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind