”தங்க தமிழ்செல்வன் பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவார்”

share on:
Classic

அமமுக-விற்கு புதிய கொள்கைபரப்புச் செயலாளரை அறிப்பேன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் குறித்து தங்க தமிழ்ச்செல்வன்  அவதூறாக பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  சென்னை அடையாறில் உள்ள தினகரனின் வீட்டில் தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ.கதிர்காமு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அமமுக-விற்கு புதிய கொள்கைபரப்புச் செயலாளர் நியமிக்கப்படுவார் எனவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன்  நீக்கப்படுவார் எனவும் தெரிவித்தார். மேலும், தன்னிடம் அவரால் விஸ்வரூபம் எடுக்க முடியாது, பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவார் எனவும் கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind