"மோடி துக்ளக் ஆட்சி நடத்துகிறார்"

share on:
Classic

பிரதமர் நரேந்திர மோடி துக்ளக் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காஞ்சிபுரம் மக்களவை வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் இதயவர்மன் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். மாம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், திருடனை பிடிக்கச் சொன்னால் நல்லவர்கள் அனைவரையும் பிடித்து வைப்பது போல, மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை இருந்ததாக விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத துக்ளக் ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் முடங்கிவிட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

 

News Counter: 
100
Loading...

aravind