கோடை காலத்தில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி ஃபேஸ்பேக்..!!

share on:
Classic

துளசி இலை சரும பிரச்சனைகளை போக்கும் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. இதை ஃபேஸ்பேக் செய்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஏற்படும் சருமத் தொல்லைகள் முற்றிலும் நீக்கும். 

சிறிதளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்ஜியை முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை அதிகரிக்க உதவும். 

சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, பருக்கள் வராமலும் தடுக்கும்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan