இறகுப் பந்து போட்டியில் தூத்துக்குடி வீரர்கள் வெற்றி !

Classic

தூத்துக்குடியில்  நடைபெற்ற மூன்று மாவட்டங்களுக்கு இடையிலான இறகுப் பந்து போட்டியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி வீரர்கள் வெற்றி பெற்று பரிசை தட்டி சென்றனர்.

தூத்துக்குடி மாவட்ட இறகுபந்து கழகம் சார்பில் மூன்று மாவட்டகளுக்கு இடையிலான இறகுபந்து  போட்டிகள் தூத்துக்குடியில துவங்கி நடைபெற்றன. தூத்துக்குடி ஜிம்கானகிளப் இறகுபந்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த இறகுபந்து போட்டியில் தூத்துக்குடி நெல்லை,கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த 160 வீரர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். 19-வயதிற்கு உட்பட்டவர் பிரிவு ஆண்கள் பிரிவு, இரட்டையர்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன 

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 19-வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் கன்னியாகுமரி மாவட்ட சேர்ந்த கார்த்திக் முதல் இடத்தையும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சாம்சன் நாகராஜ் 2-வது இடத்தையும் பிடித்தனர். 

வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றி கோப்பைகளையும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.

News Point One: 
இறகுப் பந்து போட்டியில் தூத்துக்குடி வீரர்கள் வெற்றி
News Point Two: 
மூன்று மாவட்டங்களுக்கு இடையிலான போட்டி
News Point Three: 
கன்னியாகுமரி, தூத்துக்குடி வீரர்கள் வெற்றி பெற்று பரிசை தட்டி சென்றனர்
News Counter: 
100

sankaravadivu