மலைத்தேனீ கொட்டியதால் காயமடைந்த 20 பேர் மருத்துமனையில் அனுமதி..

share on:
Classic

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே சுற்றுலா சென்ற மாணவர்களை மலைத்தேனி கொட்டியதால் 10 மாணவர்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள குடியம் குகையை காண மாணவர்கள், ஆசிரியர்கள் என 50 பேர் சென்றுள்ளனர். குகையின் அடிவாரத்தில் உள்ள கோயில் அருகே மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக நூற்றுக்கணக்கான  மலைத் தேனீக்கள் சரமாரியாக கொட்டியது.  இதில் 10 மாணவர்கள் உட்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

News Counter: 
100
Loading...

Ramya