ரூ. 200 கடனை திரும்ப செலுத்த, 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த கென்ய அரசியல்வாதி..

share on:
Classic

மளிகைக் கடைக்காரரிடம் பெற்ற ரூ.200ஐ திருப்பி செலுத்துவதற்காக, 22 ஆண்டுகளுக்கு பிறகு கென்யவின் அரசியல்வாதி இந்தியா வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரிச்சர்டு நியாககா தோங்கி என்பவர், தற்போது கென்யாவின் நியாரிபாரி சாச்சே தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவர் 1985 - 1989 காலக்கட்டத்தில் மும்பையில் உள்ள மௌலானா ஆசாத் கல்லூரியில் படித்து வந்தார். மகாராஷ்டிராவின் அவுரங்கபாத்தில் தங்கியிருந்த அவர், வான்கேதநகர் பகுதியில் இருந்த காசிநாத் காவ்லியின் மளிகைக் கடையில் தினசரி பொருட்களை வாங்கி வந்தார். 

இந்நிலையில் ரிச்சர்டு தனது மனைவியுடன் இந்தியா வந்து, தான் வாங்கிய 200 ரூபாய் கடனை திருப்பி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ 22 ஆண்டுகளுக்கு முன் நான் வாங்கிய கடனை என்னால் திரும்ப செலுத்த முடியாமல் இருந்தது. எனக்கு உணவளித்த அவர்களுக்கு நான் பணம் கொடுக்கவில்லை. எனக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது. நான் இந்தியாவிற்கு வந்து என் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தேன். தற்போது அந்த கடனை செலுத்திவிட்டதால், எனக்கு மனநிம்மதி ஏற்பட்டுள்ளது. நான் இங்கு படித்த போது, மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தேன். இந்த மக்கள் தான் எனக்கு உதவி செய்தனர்.என்றாவது ஒரு நாள் இந்தியா வந்து, அந்த கடனை திருப்பி செலுத்துவேன் என்று அப்போது நான் நினைத்துக் கொண்டேன். நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான நிகழ்வு” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya