ட்விட்டர் சி.இ.ஒ நேரில் ஆஜராக 15 நாள் கெடு..!!

share on:
Classic

பிப்ரவரி 25-ஆம் தேதி ட்விட்டர் நிறுவன தலைமை அதிகாரி ஜாக் டோர்சி நேரில் ஆஜராக வேண்டும் என இந்திய தொழில்நுட்ப துறைக்கான பாராளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் சில நாட்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சி பெண் எழுத்தாளர்கள், பத்ரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் பங்கேற்றார். சந்திப்பின்போது (Smash brahminical Patriarchy) ‘பிராமிணிய ஆதிக்கம் ஒழிக’ என எழுதப்பட்ட பதாகையை கைய்யில் பிடித்தவாரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனை ட்விட்டர் பக்கதிலும் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் பிராமிணியத்திற்கு எதிராக வாசகம் அடங்கிய பதாகையை ட்விட்டர் சி.இ.ஓ தனது கையில் பிடித்தபடி இருந்ததை சிலர் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்தியாவை துண்டும் நோக்கில் ட்விட்டர் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

இந்நிலையில் இந்திய உரிமைகள் பற்றி விவாதிக்க ட்விட்டரின் தலைமை அதிகாரி ஜாக் டோர்சி பிப்ரவரி 7-ம் தேதி நேரில் ஆஜராகக் கோரி இந்திய தொழில்நுட்ப துறைக்கான பாராளூமன்ற குழு சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சந்திப்பு, பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பாராளூமன்ற குழுவைக் காண ட்விட்டர் சி.இ.ஒ இன்று இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ட்விட்டர் நிறுவனம் தனது பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது. இது தொடர்பாக இந்திய தொழில்நுட்பத் துறைக்கான பாராளுமன்ற குழு தலைவர் அனுராக் தாகூர் கூறுகையில், ‘டிவிட்டர் நிறுவன தலைவர் வரும் பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி அன்று நேரில் ஆஜர் ஆக வெண்டும்’ என சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பிரிதிநிதிகளை சந்திக்க முடியாது எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

youtube