நாடாளுமன்ற குழுவை அவமதிக்கிறதா டுவிட்டர்..?

share on:
Classic

நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக டுவிட்டர் நிறுவனம் மறுத்தது தொடர்பாக நாடாளுமன்றம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்திய பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக, டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜேக் டோர்ஸி மற்றும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்பம் குறித்து நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. டுவிட்டர் சிஇஓ ஆஜராக வசதியாக 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. டுவிட்டர் அதிகாரிகளுக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என டுவிட்டர் கூறியுள்ளது. இது தொடர்பாக, டுவிட்டர் நிறுவனத்தை சேர்ந்த விஜய் கடே, நாடாளுமன்ற குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவை பொறுத்தவரையில் டுவிட்டர் கணக்குகள், விதிமுறைகளை காண்பிக்க முடியாது எனக்கூறி உள்ளார். ஆஜராக மறுத்து நாடாளுமன்ற குழுவை டுவிட்டர் நிறுவனம் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக டுவிட்டர் நிறுவனம் மறுத்தது தொடர்பாக ராஜ்யசபா தலைவர் மற்றும் லோக்சபா சபாநாயகர் ஆகியோர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் மத்திய அரசு தலையிட முடியாது என பியூஷ் கோயல் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth