உலகையே மாற்றப்போகும் அந்த 2 தொழில்நுட்பங்கள்...!

share on:
Classic

அடுத்த 10 ஆண்டுகளில் உலகையே திருப்பி போடப்போகும் அந்த இரண்டு டெக்னாலஜி எது என்று நீங்கள் கேட்டால், பதில் இதோ: 5G மற்றும் செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence).

5G :
முன்பு 2G-யில் ஆரம்பித்த இணைய சேவை, தற்போது 3G, 4G என வழங்கப்படுகிறது. இது பத்தாது என்று இதற்கும் மேல் வேகமாக செயல்பட கூடிய 5G-யை அறிமுகப்படுத்த வேண்டும் என பல நிறுவனங்களும் முயற்சித்து வருகின்றன. அப்படி அறிமுகமானால் இப்போது இருப்பதை விட 100 மடங்கு அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட இணைய சேவையை பெற முடியும். ’சரி இது எப்படி உலகை மாற்றும்?’ என்று நீங்கள் கேட்கலாம். எடுத்துக்காட்டாக ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். இப்போது நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மொபைல் போனில் இருக்கும் மேப்பை பயன்படுத்தி செல்கிறோம். அதுவே, 5G வந்தால் தன்னிச்சையாக செயல்படும் வாகனங்களின் உதவியுடனே நீங்கள் நினைக்கும் இடத்திற்கு சென்று சேரலாம்.

நீங்கள் நினைப்பதில்லை 5G :
5G என்றால் வெறும் வேகமான இணைய சேவை என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதுமட்டும் இல்லை. இதை வைத்து டேட்டாக்களை சேகரித்து, பிரித்து, அராய்ந்து, மின்னல் வேகத்தில் கடத்த முடியும். இதன் மூலம் இந்த தொழில்நுட்பத்தை வைத்து வணிகம், போக்குவரத்து, மருத்துவம், பொழுதுபோக்கு என எல்லா துரைகளிலும் புகுந்து விளையாடலாம். எனவே வருங்காலங்களில் இந்த தொழில்நுட்பம் வேற லெவல் வேலைகளை செய்யப்போகிறது என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.

 

செயற்கை அறிவாற்றல் :
செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) என்பது கம்ப்யூட்டர் அல்லது இயந்திரங்களுக்கு சிந்திக்கும் திறனை அளிக்கும் முயற்சி. கிட்டத்தட்ட ரோபோக்களை போல எல்லா இயந்திரங்களும் சிந்தித்து செயல்பட ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். இது மட்டும் சாத்தியமாகும் என்றால் மனிதர்களுக்கு தான் முதல் வேட்டு. முதலாளிகள் அனைவரும் மனிதர்களையும் தூக்கி விட்டு வெறும் மெஷின்களையே வேலைக்கு அமர்த்தி விடுவார்கள். எனினும், இதனால் பல நன்மைகளும் இருக்கிறது. குறிப்பாக, சிலவற்றை மட்டும் பட்டியலிட வேண்டும் என்றால் கேமிங், Speech recognition, face recognition, ரோபோ தயாரிப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். பல நிறுவனங்களும் இதை நனவாக்க ரகசியமாக உழைத்து வருகின்றன. எனவே வெகு சீக்கிரமே இந்த தொழில்நுட்பமும் புழக்கத்திற்கு வரும் என்று நம்பலாம். 

 

News Counter: 
100
Loading...

priya