நேர்முக தேர்வில் கலாய்த்த அதிகாரிக்கு, பெண் வைத்த ஆப்பு ...!!

share on:
Classic

பெண் ஒருவர் நேர்முக தேர்வில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை கம்பெனியின் பெயரை குறிப்பிட்டே டுவிட்டரில் பதிவிட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது தைரியத்தை  அனைவரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அராஜகம்:

சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கும் சுயமரியாதை என்று ஒன்றிருப்பதையே மறந்து விடுகின்றனர்.  இப்போதெல்லாம் இப்படி வேலை இடத்தில் அராஜகங்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கும் விஷியம். அதிலும் பலர் அலுவலகத்தில் நடக்கும் கொடுமைகளை வெளியே சொன்னால் எங்கே வேலை போய் விடுமோ என்று பயப்படுகின்றனர். இந்த நிலையில் தான் லண்டனை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் நேர்முக தேர்வில் தனக்கு நடந்த கொடுமையை பற்றி எவ்வித பயமுமின்றி சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

உங்க வேலையே வேணாம் !

'ஒலிவ் ப்ளாண்ட்' என்று சொல்ல படும் அந்த பெண் லண்டனில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்  நேர்முக தேர்விற்காக சென்றுள்ளார். அங்கு நடந்த இன்டர்வியூவின் போது அந்த கம்பெனியின் தலைவர் ஒலிவிடம் மிக மோசமான வகையில்பேசியுள்ளார் . இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் அவர்.  தன் சுய மரியாதை தான் முக்கியம் என்று நினைத்தவர் இந்த வேலையே வேண்டாம் என்று தூக்கி போட்டுள்ளார். 

 

தொடரும் MeTooக்கள்: 

பாதிக்கப்பட்ட ஒலிவ் கூறும்போது "நேற்று நான் ஒரு நிறுவனத்தின் (பெயர் குறிப்பிட்டே) நேர்முக தேர்விற்கு சென்றுருந்தேன். 2 மணி நேர இன்டெர் வியூவில் அந்த கம்பெனியின் தலைவர் என்னையும் என் எழுத்துக்களையும் கிழித்து எறிந்தார். அந்த அவர் பேசிய விதம் மற்றவர்கள் யாருக்கும் அறிவே இல்லை என்பது போல் இருந்தது. அவர்களுக்கு தங்கள் ஊழியர்களை மதிக்க தெரியவில்லை. எனக்கு இது சரிப்பட்டு வராது. அந்த முழு தேர்வும் எனக்கு மன அழுத்தத்தை தான் கொண்டு வந்தது" என்று அதிரடியாக கூறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. பலரும் தங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதுவும் #MeToo போல விஷ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது. 

 

News Counter: 
100
Loading...

sankaravadivu