வேர்ல்ட் டூர்-க்கு போகப்போறீங்களா? கவனமா இதை எடுத்து வெச்சிக்கோங்க...

share on:
Classic

வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா செல்ல பிரயத்தனம் ஆகுகிறீர்களா? என்ன என்னவெல்லாம் உடன் கொண்டு செல்லலாம், எதையெல்லாம் கொண்டு செல்லக்கூடாது என்பது பற்றி தெரியாமல் குழப்பத்தில் இருக்காதீர்கள். பின்வரும் செக் லிஸ்ட்-களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்...

1) ஆவணங்கள்: வெளிநாட்டுக்கு செல்ல அதிமுக்கியமானது பாஸ்போர்ட்தான் என எல்.கே.ஜி. குழந்தைக்கு கூட தெரியும் ஆனால், அத எவ்ளோ நாளுக்கு உபயோகிக்கனும் எப்படி எல்லாம் என்பதை தெரிந்து வைத்துக்கொள்க..

பாஸ்போர்ட்: சுற்றுலாவுக்காக 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இருக்க வேண்டும்.

விசா: இது, ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று. வேலிடிட்டி முடிவடைவதற்கு முன்பே அதனை புதுப்பித்துக்கொள்ளுங்கள். மறந்துவிட்டால், செல்போனில் ரிமைண்டர் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்

டிக்கெட் & காப்பீடு: சுற்றுலாவுக்கு செல்வதற்கு முன், டிக்கெட்-களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏஜென்சி மூலம் சென்றால் காலம் தாழ்த்தாபடி கவனமாக இருக்க வேண்டும்; அதேப்போல், இன்சுரன்ஸும் மிகவும் பிரதானமான ஒன்று. டூர் செல்லும் இடத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் மேலை நாடுகளில் ஹாஸ்பிட்டலில் சொத்தையே எழுதி வைத்துவிட வேண்டிய நிலை வந்துவிடும்.. அதுக்காகத்தான், டிராவல் இன்சுரன்ஸ்.

2) ஹெல்த்:

வேர்ல்ட் டூர் செல்லும் போது கிடைக்கும் அனைத்து புதுவகையான உணவு வகைகளை உண்ண நேரிடும். அந்த கால நிலைக்கு ஏற்றார் போல், தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட அடிப்படை தேவையாக உள்ள மருந்து மாத்திரைகளை கட்டாயம் உடன் எடுத்துச்செல்ல வேண்டும்.

சில நேரம் தீவுகளுக்கு செல்லும் போது கண்டிப்பாக மருத்துவர்கள் இல்லாத நிலையே ஏற்படும். எனவே, முன்னெச்சரிக்கையாக மாத்திரைகளை வைத்துக்கொள்ளவேண்டும்.

3) உணவு:

மலையேற்றம், தனிமையில் உள்ள கடல்பரப்புகளுக்கு செல்லும் போது உணவகங்களோ, கடை வீதிகளோ இல்லாத நிலை ஏற்படும். ஆகையால், புறப்படும் முன்பே சில பிஸ்கட்கள், பழ வகைகள், நட்ஸ்கள் என சில நொறுக்குத்தீனிகளை உடன் கொண்டுச்செல்லுங்கள்

4)புத்தகங்கள்:

என்னதான் கிண்டில்கள் இருந்தாலும், புத்தகங்களில் படிப்பது போன்ற உணர்வு வராது என இன்னமும் பலர் இந்த மனோபாவத்தில் உள்ளனர். ஆனால், போகும் இடமெல்லாம் புத்தகத்தை எடுத்துச் செல்லமுடியாத நிலை உருவாகலாம். ஏனெனில் உடமைகள் அதிகம் இருப்பதால் வெயிட் கூடும் என்பதால்.. அதனால், சின்ன சின்ன புத்தகங்களா எடுத்துக்கோங்க. அப்படி இல்லைனா, உணவு விடுதிகளிலேயே சிறிய நூலகங்கள் போன்ற செக்‌ஷன் இருக்கும். ‘சோ, டொண்ட் வொர்ரி’ 

5) பணம்:

உலகம் முழுக்க டிஜிட்டல் மயமானாலும், ரோட்டுக்கடைகளில் கிரெடிட்/டெபிட் கார்ட் வாங்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க. அதேப்போல், வரி வசூலிப்பும் கூடவே வருவதால், எப்போதுமே குறைந்தபட்சமாவது பணத்தை கையில் வைத்துக்கொள்ளுங்கள். 

கிஃப்ட் கார்டுகள், மெம்பர்ஷிப் கார்டுகள் இருந்தால் அதனை கட்டாயம் பயன்படுத்தி கொள்ளுங்கள்.. இல்லைனா, வீணாக பணம் செலவழிக்க நேரிடும்.

6) கேட்ஜெட்ஸ்:

சுற்றுலாவுக்கு செல்வதற்கு முன்பே, செல்போன், லேப்டாப், கேமிராவுக்கான சார்ஜர்கள், யுனிவர்சல் அடாப்டர்கள் என அனைத்தையும் எடுத்துக்கோங்க. முக்கிய எல்லாத்தையும் சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 

News Counter: 
100
Loading...

janani