பிட்சை சேதப்படுத்த முயன்றாரா பாகிஸ்தான் வீரர்..! 

share on:
Classic

பேட்டிங் ஆடுகளத்தில் பந்து வீசி விட்டு நடந்ததால் பாகிஸ்தான் வீரரை இரு முறை எச்சரித்த அம்பயர்.. 

மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித், ராகுல் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை ஆமிர் வீசினார். தனது முதல் ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் மெய்டன் செய்தார்.   
ஆட்டத்தின் 3 வது ஓவரை வீசும் போது பந்து வீசிவிட்டு ஆடுகளத்திற்க்குள் ஓடிவந்தார். உடனே அம்பயர் அமீரை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். அதனை அடுத்து 5-வது ஓவரில் 5-வது பந்தை வீசி விட்டு ஆடு களத்திற்க்குள் ஓடினார். இந்த முறையும் அம்பயரால் அழைத்து அமீர் எச்சரிக்கப்பட்டார். இது அவருக்கு இரண்டாவது எச்சரிக்கை ஆகும். மீண்டும் ஒருமுறை அப்படி செய்திருந்தால் ஆட்டத்தில் மேற்கொண்டு அவர் பந்து வீச தடை செய்யப்பட்டிருப்பார். அவர் வேண்டும் என்றே ஆடுகளத்தை சேதப்படுத்தினாரா என்ற கேள்வி கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் எழுந்தது குறிப்பிடத்தக்கது..

 

News Counter: 
100
Loading...

Saravanan