கோவையில் உள்ள பாஜக பிரமுகரின் துணிக்கடைக்கு தீ வைப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகோவையில் உள்ள பாஜக பிரமுகரின் துணிக்கடைக்கு தீ வைப்பு

கோவையில் உள்ள பாஜக பிரமுகரின் துணிக்கடைக்கு தீ வைப்பு

கோவையில் உள்ள பாஜக பிரமுகரின் துணிக்கடைக்கு தீ வைப்பு

கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க பிரமுகருக்கு சொந்தமான துணிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு. 

கோவை காந்திபுரத்தில் கணபதி பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் புவனேஸ்வரன், காந்திபுரம் 7 வது வீதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணியளவில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கடை வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தீ வேகமாக கடையின் ஷட்டர் முழுவதும் பரவியது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி போலீசார், அங்கு இருந்த சிசிடிவி கேரமாவை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் இரண்டு பேர் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.