டவுன்லோடில் ஜியோ, அப்லோடில் ஐடியா... நம்பினால் நம்புங்கள்...!

Classic

கடந்த நவம்பர் மாதத்தில் மிகவும் வேகமான 4ஜி டவுன்லோடு மற்றும் 4ஜி அப்லோடு திறன்  கொண்ட நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' வெளியிட்டுள்ளது. 

4ஜி சராசரி டவுன்லோடு வேகம்:
1. ஜியோ - 20.3Mbps (கடந்த அக்டோபரில் 22.3Mbps)
2. ஏர்டெல் - 9.7Mbps (கடந்த அக்டோபரில் 9.5Mbps)
3. வோடஃபோன் - 6.8Mbps (கடந்த அக்டோபரில் 6.6Mbps)
4. ஐடியா செல்லுலார் - 6.2Mbps (கடந்த அக்டோபரில் 6.4Mbps)

4ஜி சராசரி அப்லோடு வேகம்:
1. ஐடியா செல்லுலார் - 5.6Mbps
2. வோடஃபோன் - 4.9Mbps
3. ஜியோ - 4.5Mbps
4. ஏர்டெல் - 4Mbps

இந்தியாவின் இணைய வேகம்:
கடந்த நவம்பர் மாதத்தில் 'மொபைல் டேட்டா' வேகமாகக் கொண்ட நாடுகளுக்கான  பட்டியலை பிரபல 'ஊக்லா' நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், 9.93Mbps  சராசரி டவுன்லோடு வேகத்துடன் இந்தியாவிற்கு 111-வது இடம் கிடைத்துள்ளது. இதேபோல், 'பிராட்பேண்டு' வேகத்திற்கான பட்டியலில் இந்தியா 65-வது இடம் பிடித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தொலைதொடர்பு அமைப்பையும், பயனாளிகளையும் கொண்ட இளம் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar