தலித் திருமண ஊர்வலத்தில் ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..

share on:
Classic

ராஜஸ்தானில் தலித் திருமண ஊர்வலத்தில் ராஜபுத்திர சமூகத்தினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு தலித் போலீஸ் பணியாளரின் திருமண ஊர்வலம் நடைபெற்றது. துகார் என்ற கிராமத்தின் பிரதான பகுதியில் சென்ற போது திடீரென புகுந்த ராஜபுத்திர சமூகத்தினர் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களை தடுக்க முயன்ற போது கடுமையான ஆயுதங்கள் கொண்டு அவர்களை அடித்து நொறுக்கினர். இதனால் பலர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் மணமகனும் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் மணமகன் சவாய் ராய் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து காவல்துறையினர் கூறிய போது, தாக்குதல் நடத்திய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். 

News Counter: 
100
Loading...

Ramya