U-20 உலகக்கோப்பை கால்பந்து : லீக் சுற்றில் உக்ரைன், உருகுவே வெற்றி

share on:
Classic

20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் உக்ரைன், உருகுவே அணிகள் வெற்றிபெற்றன.

20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் போலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் உருகுவேயுடன் நார்வே அணி மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21, 29 ஆகிய நிமிடங்களில் கோல் மழை பொழிந்தனர்.

இதேபோல் ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் நார்வே வீரர் கிறிஸ்டியன் தாலே கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் உருகுவே அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் உக்ரைனுடன் அமெரிக்கா மோதியது. அனல் பறந்த இந்த போட்டியில் உக்ரைன் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

 

News Counter: 
100
Loading...

aravind