இந்தியாவில் அமெரிக்க அணுமின் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்

share on:
Classic

இந்தியாவில் 6 அமெரிக்க அணுமின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஆண்ட்ரியா தாம்சனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

அப்போது, இந்தியாவில் 6 அமெரிக்க அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு வெளியுறவுத்துறை செயலர்களும் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev