சிரியாவின் கடைசி பகுதியை மீட்டெடுக்க கடும் சண்டை

share on:
Classic

சிரியாவின் கடைசி பகுதியை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு அவர்களுடன் அமெரிக்க கூட்டுப்படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க கூட்டுப்படைகள் களம் இறங்கின. அதனைத் தொடர்ந்து, சிரியாவின் முக்கிய நகரங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிரியாவின் வடகிழக்கு பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்நாட்டு மற்றும் அமெரிக்க கூட்டுப்படையினர்  கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ள கடைசி பகுதியான, ஈராக் எல்லையில் உள்ள டெயிர் அல் ஜோர் மாகாணத்தின் பாகுஸ் கிராமத்தில் இறுதி கட்ட தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதற்காக 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind