புதினுடனான சந்திப்பை திடீரென ரத்து செய்த டிரம்ப்

share on:
Classic

உக்ரைன் விவகாரத்தை காரணம்காட்டி ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். 

இதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உக்ரைனில் 3 கடற்படை கப்பல்கள் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றிய கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள், இன்னும் ரஷியாவில் இருந்து உக்ரேனுக்கு திரும்பவில்லை என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட புதினுடனான சந்திப்பை ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்னை தீர்க்கப்படும்போது மீண்டும் கூடிய விரைவில் ஒரு அர்த்தமுள்ள சந்திப்பை தான் எதிர்பார்ப்பதாகத் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind