”ஏழைகளுக்கு பயன்படாத பட்ஜெட்” - ஸ்டாலின் கடும் விமர்சனம்

share on:
Classic

தமிழக அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு பயன்படாத பட்ஜெட் என எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

2019-20 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், தமிழக அரசின் பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத உதவாக்கரை பட்ஜெட் என கடுமையாக விமர்சித்தார். வளர்ச்சிக்கு செலவு செய்ய வேண்டிய அரசு, கடனுக்கு வட்டி கட்டி கொண்டிருப்பதை இந்த பட்ஜெட் தெளிவாக காட்டுவதாக தெரிவித்தார்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது, அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், வருவாயை பெருக்குவதற்கு எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை எனவும் தெரிவித்தார். மாநில அரசு கடன், நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை அதிகமாகி, நிதிமேலாண்மை மோசமான தோல்வியை அடைந்துள்ளதை இந்த பட்ஜெட் காட்டுவதாக தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

aravind