செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறையும்..!!

share on:
Classic

செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விஞ்ஞான வளர்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும், நம்மை அடிமைப்படுத்தும் வல்லமை படைத்ததாகவும் உருவெடுத்திருப்பது செல்போன். குழந்தைகள் முதல் முதியோர் வரை செல்போன் இல்லாத ஆட்களே இல்லை என்ற அளவுக்கு உருமாறியிருக்கிறது விஞ்ஞான உலகம். நிலா காட்டி சோறு ஊட்டிய பெற்றோர்கள், செல்போன் கொடுத்து குழந்தைகளை உணவருந்த வைக்கும் நிலைக்கு வந்திருக்கிறது இந்த காலம்... இது குழந்தைகளின் வாழ்வியலில் ஏற்படுத்தும் ஆபத்தை பெற்றோர்களே அறியாதிருப்பது தான் பெரும் கவலையடிக்கக்கூடிய சூழல்..

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் அவர்கள் நேரடியாக கதிர்வீச்சு தாக்குதல்களுக்கு உள்ளாவதுடன், சமூக அமைப்பில் இருந்து தனிமையாக்கவும் படுகின்றனர். இதனால், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பிறரோடு பழகும் தன்மையும் குறைவதாக ஆய்வுகள் கூறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தற்பெருமையாக கருதக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

12 வயது வரை குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

செல்போனை சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக பயன்படுத்த பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டுமே தவிர, செல்போன்களின் அடிமைகளாக குழந்தைகள் மாறிவிடக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

News Counter: 
100
Loading...

Ragavan