பாஜக தலைவர் மீது பாலியல் புகார் கூறிய பின்பு காணாமல் போன பெண் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு..

share on:
Classic

முன்னாள் பாஜக அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் கொடுமை புகார் கூறிய பின்பு, காணாமல் போன் பெண் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார். 

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாஜக தலைவர் சின்மயானந்த் நடத்தி வரும் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோவில் சின்மயானந்த மீது பாலியல் கொடுமை புகார் கூறியிருந்தார். பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்துவிட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார். அந்த வீடியோ வெளியிட்ட மறுநாளில் இருந்து அவரை காணவில்லை. ஆனால் அப்பெண்ணின் குற்றச்சாட்டிற்கு சின்மயானந்த் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். மேலும் அவருக்கு எதிரான சதிச்செயலில் இதுவும் ஒரு  பகுதி எனவும் அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் காணாமல் போன பெண் தனது நண்பருடன் ராஜஸ்தானில் இருந்ததை அறிந்த போலீசார் அவரை கண்டுபிடித்தனர். அவரை உத்திரப்பிரதேசத்திற்கு திரும்ப அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

72 வயதான சின்மயானந்த், 3 முறை எம்.பியாக இருந்துள்ளார். மேலும் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் இணையமைச்சராகவும் இருந்தார். ஏற்கனவே இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளார் சின்மயானந்த். 2011-ம் ஆண்டு அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர் அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya