அயோத்தி வழக்கு : நீதிபதி யு.யு.லலித் விலகல்..

share on:
Classic

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்விலிருந்து, நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்,  வழக்கை புதிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. மேலும், இந்த அமர்வில், தலைமை நீதிபதி கோகோய், நீதிபதிகள் ரமணா, யுயு லலித், பாப்தே, சந்திரசூட் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்றும் அறிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இன்று விசாரணை நடக்காது என்றும், அதற்கான தேதி மற்றும் கால அட்டவணை குறித்து மட்டுமே முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, ராஜீவ் தவான் என்ற வழக்கறிஞர், நீதிபதி லலித், அயோத்தி தொடர்பாக கல்யாண் சிங் தொடர்ந்த வழக்கில், வழக்கறிஞராக இருந்தபோது ஆஜரானதை சுட்டி காட்டினார். இதனையடுத்து வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி லலித் அறிவித்தார். இதைத்தொடர்ந்து புதிய நீதிபதி நியமிக்கப்பட வேண்டியது இருப்பதால், வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் 4 பேரும் தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

aravind