’வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது..!!

share on:
Classic

விக்ரம் பிரபுவின் அடுத்த படமான வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கும்கி படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் விக்ரம் பிரபு. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த இவன் வேறமாதிரி, அரிமா நம்பி போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்திருந்தாலும் சமீப காலமாக தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் விக்ரம் பிரபு ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இவர் இப்போது மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடித்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கிறார்.

விக்ரம் பிரபுவின் 16-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என ஏற்கனவே டைட்டில் வைத்திருந்த நிலையில் வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பை சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர். 

மேலும் இந்த வானம் கொட்டட்டும் படத்தில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் கணவன்-மனைவியாகவே நடிக்க. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாங்க. இதுமட்டுமில்லாமல் இந்த படத்தை பற்றிய மற்ற தகவல்களை விரைவில் வெளியிடுவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan