49.9 அடியாகக் குறைந்த வைகை அணை நீர்மட்டம்

share on:
Classic

மழையின்மையால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையின் நீர் மட்டம் தற்போது 49.92 அடியாக குறைந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு இந்த அணையிலிருந்தே பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். 69 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது நீர்மட்டம் 49புள்ளி 92 அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால் 7 மாதங்களுக்குப் பின்னர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. இருப்பினும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

News Counter: 
100
Loading...

youtube