முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு வைகோ, திருமுருகன் காந்தி நினைவஞ்சலி..!

share on:
Classic

கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் கட்டமைப்பட்ட இனப்படுகொலை நடைபெற்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போரின் போது, முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமுருகன் காந்தி, இனப்படுகொலை செய்த இலங்கை அரசை இந்திய அரசு பாதுகாத்து வருவாதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, பேசிய வைகோ, கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் கட்டமைப்பட்ட இனப்படுகொலை நடைபெற்று வருவதாகவும், ஈழத்தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

 

News Counter: 
100
Loading...

aravind