தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வைகோ பிரசாரம்..!

share on:
Classic

திமுக வேட்பாளர் தனுஷ் குமாரை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் குமாருக்கு ஆதரவாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாக்கு சேகரித்தார். திருவேங்கடம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, ஏழை-எளிய மக்கள், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாய கடன், கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan