ரமேஷ் பொக்ரியாலுக்கு வைகோ கடும் கண்டனம்

share on:
Classic

மாணவர்கள் ஆசிரியர்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி செய்வதாக அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியிருந்தார். வைகோவின் இந்த கடிதத்தை எதிர்த்து அப்போதைய தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, வரும் 19ஆம் தேதி வைகோ நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாணவர்கள் ஆசிரியர்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind