வாஜ்பாயி இந்தியராக இருந்ததற்கு பெருமைப்படவில்லையா..? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..

share on:
Classic

அடல் பிகாரி வாஜ்பாயி இந்தியராக இருந்ததற்கு பெருமைப்படவில்லையா என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

17-வது மக்களவையின் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ப்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து பாராளுமன்ற கூட்டு கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உரை நிகழ்த்தினார். அவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மக்களவை உறுப்பினர் பதிலளித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இதில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். மேலும் பேசிய அவர் “ 2015- ஷாங்காய் மாநாட்டில் மோடி என்ன செய்தியை உலகிற்கு தந்தார்..? முன்பு இந்தியர் என்று சொல்வதையே நாம் அவமானமாக கருதினோம், ஆனால் தற்போது நாம் பெருமைப்படுகிறோம். அடல் பிகாரி வாஜ்பாயி இந்தியராக இருந்ததற்கு பெருமைப்படவில்லை என்று நீங்கள் சொல்ல முடியுமா..?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் பாஜக எம்.பிக்களையும் விட்டுவைக்கவில்லை, அவர்களையும் கடுமையாக சாடினார். “ இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். ஆனால் இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு (பாஜக எம்.பிக்கள்) கவலையில்லை, எம்.பிக்களாகிய நாம் எதுவும் செய்யக்கூடாது. பிரதமர் மோடி மட்டுமே செய்ய வேண்டும், நீங்கள் அவரை பாராட்டி கொண்டே இருக்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya