"கோத்ரா கலவரத்தையொட்டி மோடி அரசை கலைக்க திட்டமிட்டார் வாஜ்பாய்"

share on:
Classic

கோத்ரா கலவரத்தையொட்டி மோடி முதல்வராக இருந்த குஜராத் அரசை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கலைக்க விரும்பியதாக யஷ்வந்த் சின்ஹா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது கோத்ரா கலவரம் வெடித்ததையொட்டி பெரும் பதற்றம் நிலவியது. இதனால், பெரிதும் அதிருப்தியடைந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மோடியின் ஆட்சியை கலைக்க விரும்பியதாக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டியதால் பிரதமர் வாஜ்பாய் தனது முடிவை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் யஷ்வந்த் சின்ஹா பேசியுள்ள இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan