வல்லமை மிக்க வல்லாரையின் மகிமை...!

share on:
Classic

வல்லமை படைத்த கீரையான வல்லாரையை உண்பதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை பெற முடிகிறது. பல வகையான மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த மூலிகை நீர்நிலைகளான ஆறு, கால்வாய், குட்டை, வயல் வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சேர்ந்தது.

இது அரைவட்ட வெட்டு பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவம் கொண்ட தாவரமாகும். ஈரமான நிலத்தில் படர்ந்து வளரக்கூடிய கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இந்தக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பை கிடைப்பதோடு உடலுக்கு நல்ல பலத்தையும் தருகிறது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. வலிப்பு நோய், யானைக்கால் வியாதி, வயிற்றுக் கடுப்பு, வயிற்று வலி போன்ற வியாதிகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

சில நேரங்களில் வாயில் அச்சரங்கள் ஏற்பட்டு உணவு சாப்பிட முடியாமல் இருக்கும் போது இக்கீரையை சாப்பிட்டால் பூரண குணமாகும். சிறுவர்களுக்கு ஏற்படும் நாள்பட்ட வயிற்றுப்போக்கு மற்றும் சரும நோய்களுக்கும் இது நல்ல மருந்தாகும். இந்த கீரையை மைப்போல அரைத்து சொறி, சிரங்குகள் உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவில் குணமடையும்.

முக்கிய குறிப்பு :
நோய்க்கு மருந்தாக இக்கீரையை சாப்பிடுவதாக இருந்தால் உணவில் உப்பு, புளி அதிகம் சேர்க்கக் கூடாது.
 

News Counter: 
100
Loading...

aravind