வரலட்சுமி சரத்குமாருக்கு மக்கள் செல்வி பட்டம்..!!

share on:
Classic

வரலட்சுமி சரத்குமாருக்கு,‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்தை‘டேனி’ படக்குழுவினர் வழங்கியுள்ளனர். 

புதுமுக இயக்குநர் சாந்தமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் ‘டேனி’. இதில் வரலட்சுமி போலீசாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, வேல.ராமமூர்த்தி, சயாஜி ஷிண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரலட்சுமியின் பிறந்தநாளன்று வெளியானது. 

அப்போது வெளியிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டரில் வரலட்சுமியின் பெயருக்கு முன்னால்‘மக்கள் செல்வி’ என்ற பட்டம் இணைக்கப்பட்டிருந்தது. தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியை’மக்கள் செல்வன்’ என்று கொண்டாடப்படுகிறார். அந்தவரிசையில்‘மக்கள் செல்வி’யாக மாறியிருக்கிறார் வரலட்சுமி. சினிமா நடிகையான வரலட்சுமி, 'சேவ் சக்தி' என்கிற தன்னார்வ அமைப்பை தொடங்கி, அதன் வாயிலாக பல உதவிகளை செய்து வருவதால் அவருக்கு ‘மக்கள் செல்வி’ பட்டத்தை வழங்கியதாக படக்குழுவினர் சொல்கிறனர். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan