'வண்ணக்கிளி பாரதி' படப் பாடல் வெளியீட்டு விழா!

share on:
Classic

ஜாதிப் பிரச்னையை மையமாகக் கொண்டு தயாராகும் வண்ணக்கிளி பாரதி படப் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.   

ஆர்யா நடிப்பில் வெளிவந்த‘கலாபக் காதலன்’ மற்றும் தேன்கூடு, வந்தா மல போன்ற படங்களை இயக்கிய இகோர், தற்போது வண்ணக்கிளி பாரதி என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். பிலிம் பூஜா பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். மனிஷாஜித் நாயகியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் 'நான் மகான் அல்ல' மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, முஜிப் ரஹ்மான் இசையமைக்க,மோகன்ராஜ், குகை மா.புகழேந்தி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த படத்தின் படல்களை படக்குழு வெளியிட்டது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan