பொன்பரப்பி வன்முறையை கண்டித்து விசிக தலைமையில் ஆர்ப்பாட்டம்

share on:
Classic

பொன்பரப்பியில் நடந்த கலவரத்தை கண்டித்து, சென்னை வள்ளூவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைமையில் ஆர்பாட்டத்தில் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அன்று இருதரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடுத்து நொறுக்கப்பட்டன. இதனைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தினால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறது என்பது உண்மையாகும் என்றார்.

 

News Counter: 
100
Loading...

aravind