திலகவதி படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

share on:
Classic

கல்லூரி மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் , “ திலகவதி படுகொலை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தமிழக காவல்துறை மீது  நம்பகத்தன்மை இல்லை என்றும் கூறினார். 

மேலும், காவல்துறையினருக்கு உள்நோக்கம் இல்லை என்றாலும் சாதி, மதம் அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு அவர்கள் பணியக்கூடிய போக்கு  உள்ளதாக குற்றம்சாட்டினார். இதன் காரணமாக  மாணவி திலகவதி கொலை வழக்கை   சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று  திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind