விதிகளை முறையாக பின்பற்றியும் ஆலை மூடப்பட்டது : வேதாந்தா தரப்பு குற்றச்சாட்டு...

share on:
Classic

விதிகளை முறையாக பின்பறியும், முன்னறிவிப்பு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன், இன்று ஆறாவது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, ஸ்டெர்லைட் ஆலை மாசுகட்டுபாட்டு வாரியத்தின் விதிகளை முறையாக பின்பற்றி வந்த நிலையில், எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். முறையாக அனுமதி பெற்று இயங்கும் தொழிற்சாலைகளால் கூட சுற்றுசுழல் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ஸ்டெர்லைட் ஆலையால் மிக குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக வாதிட்டார். ஸ்டெர்லைட் வழக்கில் அடுத்த வாரம் மூன்று நாட்கள் வாதங்கள் வைக்க அரசு தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்றுகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan