கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 30 சதவீதம் உயர்வு..!

share on:
Classic

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

பருவமழை பொய்த்ததாலும், கடும் வறட்சி நிலவுவதாலும் காய்கறிகளின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கடும் வெயில் காரணமாக காற்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளின் வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காற்கறிகளின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தக்காலி கிலோ ஒன்றுக்கு ரூ.10 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 3 மடங்கு வரை உயர்ந்து 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனையாகிறது. கேரட் ரூ. 60, பீன்ஸ் ரூ. 100, பச்சை மிளகாய் ரூ. 40 வரையும் விலை உயர்ந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan