கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

share on:
Classic

தை திருநாளையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு மக்கள் திரும்புவதால், மதுராந்தகம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து  6 நாட்கள் விடுமுறை என்பதால், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இங்கு வேலை செய்பவர்கள் தை திருநாளை முன்னிட்டு தங்கள் குடும்பத்திரனுடன் விழாவினை சிறப்பிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால், இந்த நாட்களில் பொதுவாகவே போக்குவரத்து நெரிசல்கள் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள நெடுஞ்சாலைகளிலும் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று மதுராந்தகம் சுங்கச்சாவடியில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

News Counter: 
100
Loading...

sasikanth