வேலூரை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..

share on:
Classic

இன்று புதிதாக 2 மாவட்டங்கள் உருவான நிலையில், வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இன்று தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் அறிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது. முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு சரத்குமார், ராமதாஸ் போன்ற பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைசருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் “ காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலியை பிரித்து தென்காசி மாவட்டமும் புதிதாக அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் மிக அதிகமாக 13 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மாவட்டம் வேலூர் தான். அந்த மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும். இடைத்தேர்தல் முடிந்தவுடன் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன் அதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

Ramya