மக்களவை தேர்தலால் களைக்கட்டவுள்ள வேலூர் நகரம்..!

share on:
Classic

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், வேலூரில் தேர்தல் திருவிழா இன்று தொடங்கியது. இன்று முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை வேலூர் நகரம் களைகட்டவுள்ளது.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கியது. மனுத்தாக்கல் செய்ய ஜூலை 18 ஆம் தேதி கடைசி நாளாகும்.

கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது களத்தில் இருந்த வேட்பாளர்களே மீண்டும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். இந்நிலையில், வேலூர் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட அ.ம.மு.க.,  தற்போது போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. தற்போது கட்சியை பதிவு செய்யும் முயற்சியில் இருப்பதால்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். கட்சிக்கென தனி சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் அமமுக போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.  

இதனிடையே, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  டிடிவி தினகரன் மக்கள் செல்வாக்கு இல்லாததால்தான், வேலூர் தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind